Begin typing your search above and press return to search.
நமது செயல்திட்டம்

மக்களுடைய குரலைப் பேசுவதுதான் ஊடகத்தின் வேலை. மக்கள் குரல் என்றால், மக்களில் எல்லா தரப்புகளுடைய குரல்களுக்குமான தளமாக ஒரு நல்ல ஊடகம் இருக்க வேண்டும். சரி, இதில் நமக்கென்று ஒரு செயல்திட்டம் இருக்கிறதா இல்லையா என்றால், நிச்சயம் இருக்கிறது. சமத்துவமான ஓர் இடத்தை நோக்கி, பன்மைத்துவம் மிக்க ஓர் இடத்தை நோக்கி, உன்னதமான ஓர் இடத்தை நோக்கி இந்தச் சமூகம் நகர வேண்டும். அதற்காக அறிவார்ந்த தளத்தில் பணியாற்றுவதே நம்முடைய ஊடகத்தின் செயல்திட்டம்!
- ஆர்.பி.சத்தியநாராயணன், நிறுவனர், சிந்தை
Next Story


